Site icon அநேகன்

ஜூலை முதல் சுல்தானா அமீனா மருத்துவமனையில் கியூஆர் பயனீடு அமல்! டத்தோ ஓன் ஹபீஸ்

ஜொகூர் பாரு, ஜூன் 17-

வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இங்குள்ள சுல்தானா அமீனா மருத்துவமனையில் நோயாளிகள் கியூஆர் குறியீடு வாயிலாக காத்திருப்பு எண்களைப் பெறலாம் என்று ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபீஸ் காசி தெரிவித்தார்.

நோயாளிகள் மருத்துவரைக் காண்பதற்கும் மருந்தகத்தில் மருந்துகளைப் பெறுவதற்கும் தேவைப்படும் காத்திருப்பு எண்களை ஸ்மார்ட் கியூ சிஸ்டம் (எஸ்கியூஎஸ்) வழங்கும் கியூஆர் குறியீடு வாயிலாக பெற்றுக் கொள்ளலாம் என்றார் .

இதன் வழி நாட்டில் எஸ்கியூஎஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தும் முதல் பொது மருத்துவமனையாக சுல்தானா அமீனா மருத்துவமனை விளங்கும் என்றார் மந்திரி பெசார்.

இந்நோக்கத்திற்காக 1 மில்லியன் வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார் .

தற்போது நோயாளிகள் மருத்துவரைப் பார்ப்பதற்கும் மருந்துகளைப் பெறுவதற்கும் தனித்தனி வரிசையில் நின்று இரு எண்களைப் பெற வேண்டும்.

இனி இதற்கு அவசியமில்லை. இவ்விரு நோக்கத்திற்காகவும் இவர்கள் கியூஆர் குறியீடு வழி ஒரே எண்ணைப் பயன்படுத்தினால் போதுமானது.

 

Exit mobile version