Site icon அநேகன்

அமைச்சர் பதவியிலிருந்து விலகுவது  உறுதி! நிக் நஸ்மி 

கோலாலம்பூர், ஜூன் 17-

பிகேஆர் கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கான போட்டியில் தோல்வியடைந்த இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அமாட் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதில் தாம்  உறுதியாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

தொடர்ந்து அமைச்சராக இருக்க வேண்டுமென்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் எதிர்பார்ப்புக்கு மாறாக, அவர் தமது முடிவில் மிக உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமது பதவி விலகலை ஆழ்ந்து சிந்தித்த பின்னரே, முடிவெடுத்து உள்ளதாகவும் தாம் அமைச்சர் பதவியில் இருந்த ஈராண்டு காலத்தில் பல நல்ல திட்டங்களுக்கு அடித்தளமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் .

அமைச்சராகத் தொடர தமக்கு நிறைய வாய்ப்பு இருந்தாலும் தமது முடிவில் உறுதியாக இருப்பதாக நிக் நஸ்மி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

 

Exit mobile version