Site icon அநேகன்

கோலாலம்பூரில் வசிப்பது பாதுகாப்பானதே! ருஸ்டி ஈசா உறுதி

கோலாலம்பூர் , ஜூன் 17- தலைநகர் கோலாலம்பூரில்  வசிப்பது பாதுகாப்பானதே என்று மாநகர் போலீஸ் தலைவர் ருஸ்டி ஈசா உறுதி கூறியுள்ளார்.

கடந்த 4 நாள்களில் பிரிக்பீல்ட்ஸ் மற்றும் செராஸில் நடந்துள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் காரணமாக கோலாலம்பூர்வாசிகள் கலக்கமும் அச்சமும் அடைய வேண்டாமென்று கூறியிருக்கும் அவர், மாநகரின் பாதுகாப்பு போலீஸாரின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

செராஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு சரவாக்கியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் கள்ளக் கடத்தல் நடவடிக்கையின் காரணமாக இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இச்சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு மேலுமொருவர் காயமடைந்துள்ளதில் குற்றவாளிகளுக்கு இடையே முன் விரோதம் காரணமாகவே நடந்த துப்பாக்கிச் சூடு என்றும் ருஸ்லி தெரிவித்தார்.

 

Exit mobile version