Site icon அநேகன்

வெடிகுண்டு மிரட்டல்: விமானம் வேறு விமான நிலையத்திற்குத் திசை திருப்பல்! 

மேடான், ஜூன் 17 – சவூதி அரேபியா ஜெட்டா விமான நிலையத்திலிருந்து இந்தோனேசியாவிற்குத் திரும்பிக் கொண்டிருந்த விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டதை அடுத்துஅந்த விமானம் ஜகார்த்தா சொக்கார்னோ-ஹத்தா விமான நிலைத்திற்குச் செல்லாமல் மேடான் குவாலநாமு விமான நிலையத்திற்கு திசை திருப்பி விடப்பட்டது.

‘SV 5276’ எனும் அந்த விமானம் ஹஜ்ஜு கடமையை முடித்துக் கொண்ட இந்தோனேசியாவின் 442 பயணிகளை ஏற்றிக்கொண்டு நாடு திரும்பும்போது இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

பயணிகள் தரையிறங்கிய பின்னர் அந்த விமானத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

 

Exit mobile version