Site icon அநேகன்

பினாங்கில் சொத்துடமைகளை வாங்குவோருக்கு 5% கழிவு! மாநில முதல்வர் அறிவிப்பு

ஜார்ஜ் டவுன், ஜூன் 18-

பினாங்கில் வீடுகள், வணிகத் தளங்களை வாங்க விரும்பும் அனைத்து இனத்தினருக்கும் 5 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சாவ் கோன் இயோ தெரிவித்தார் .

இம்மாநிலத்தில் விற்கப்படாத 3,000 வீடுளை வாங்கும் இந்திய முஸ்லிம்களுக்கு 5 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை இப்போது மற்ற இனத்தவர்களுக்கும்  விரிவுப்படுத்த மாநில அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக சாவ் கோன் இயோ கூறினார்.

மடானி உரிமை திட்டத்தின் கீழ் இடம் பெற்றுள்ள இந்தச் சலுகையானது இன்று முதல் ஓராண்டு காலம் வரை நடப்பில் இருக்கும் என்றும் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.

முன்னதாக, இத்திட்டத்தின் கீழ் வீடுகள் மற்றும் வணிக தளங்களை வாங்கும் இந்திய முஸ்லிம்களுக்கு 5% கழிவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு மற்ற இனத்தவர்களிடையே பெரும் சர்ச்சையைத் தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது

 

Exit mobile version