Site icon அநேகன்

ஈரானில் உள்ள மலேசியர்கள் வெள்ளிக்கிழமை தாயகம் திரும்புவர்!  ஃபாஹ்மி ஃபாட்சில்

புத்ரா ஜெயா, ஜூன் 18-

ஈரானில் இருக்கும் மலேசியர்கள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூன் 20ஆம் தேதி) தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

ஈரானில் தற்போது போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள மலேசியர்களை தாயகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக  ஃபாஹ்மி சொன்னார்.

இதன் பொருட்டு அனைத்து மலேசியர்களுக்கும் விசா ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதையும் ஃபாஹ்மி  சுட்டிக் காட்டினார்.

அந்நாட்டில் உள்ள மலேசியர்களின் தற்போதைய நிலை குறித்து வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version