Site icon அநேகன்

IJN-னில் ஹாடியை சந்தித்தப்போது எடுத்த நிழற்படத்தை நீக்கிய சுகாதார அமைச்சர்

கோலாலம்பூர், ஜூன் 18-

தேசிய இருதய கழகம் – IJN-னில் சிகிச்சைப் பெற்றுவரும் பாஸ் கட்சி தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கை சந்தித்தபோது எடுத்த நிழற்படத்தை, தனது சமூக ஊடகப் பதிவிலிருந்து, சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜுல்கிஃபி அகமட் நீக்கினார்.

தங்களின் அனுமதியின்றி, தான் ஸ்ரீ ஹாடியின் நிழற்படம் பகிரப்பட்டது குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்ததைத் தொடர்ந்து, டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜுல்கிஃபி அப்படத்தை நீக்கினார்.

டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜுல்கிஃபியின் பதிவில் தற்போது அவர் IJN ஊழியர்களுடன் மட்டுமே இருக்கும் நிழற்ப்படங்கள் உள்ளன.

டத்தோ ஸ்ரீ ஜுல்கிஃபியின் அந்நடவடிக்கை, தங்கள் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்காததாகவும், மருத்துவமனையில் நோயாளிகளைச் சந்திப்பதற்கான நிர்வாக நடைமுறையை மீறியதாகவும் உள்ளதாக, முன்னதாக, தான் ஸ்ரீ ஹாடியின் மகன் முகமட் கலீல் சாடியிருந்தார்.

Exit mobile version