ஸ்கூடாய், ஜூன் 19-
200 கிலோ எடை கொண்ட 46 வயது ஆடவரை அடுக்குமாடி வீட்டிலிருந்து கீழே இறக்குவதற்கு தீயணைப்பு வீரர்களின் உதவி நாடப்பட்டது.
ஸ்கூடாய் தாமான் முத்தியாரா ரினியில் உள்ள அடுக்குமாடியின் இரண்டாவது தளத்தின் வீட்டிலிருந்த அவரைக் கீழ் மாடியில் இறக்குவதற்கு 10 தீயணைப்பு வீரர்கள் மூன்று தீயணைப்பு வண்டிகளில் வரவழைக்கப்பட்டு சிறப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.
சுவாசிப்பதில் சிரமத்தை எதிர் நோக்கி இருந்த அந்த ஆடவரை கீழ் தளத்திற்கு இறக்கிய பின்னர் ஜொகூர்பாரு சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

