Site icon அநேகன்

கல்வி வழி இந்திய சமூகத்தில் உருமாற்றத்திற்கு வித்திட்டவர் தான்ஸ்ரீ தம்பிராஜா! -அருள் குமார்


பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24-
கல்வி வாயிலாக இந்திய சமூகத்தில் உருமாற்றத்தை ஏற்படுத்தி இச்சமூகத்தின் மேம்பாட்டில் மிகப் பெரிய பங்காற்றியவர் தான்ஸ்ரீ டத்தோ எம்.தம்பிராஜா என்று கூறப்படுகிறது.

 இந்திய மாணவர்களைக் கல்வியில் உயர்த்துவதையே தனது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருந்த உன்னத மனிதர் இவர் என்று நெகிரி மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் ஜம்புநாதன் தெரிவித்தார்.

“நான் ஸ்ரீ முருகன் நிலையத்தின் முன்னாள் மாணவன். எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகளுக்கு எனக்கு முழு வழிகாட்டியாக இருந்தது இந்த கல்வி நிலையமே. இன்றைய எனது வளர்ச்சிக்கு அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் தான்ஸ்ரீ தம்பிராஜா ” என்று நன்றி பெருக்கக் கூறினார் அருள்குமார் .

இதனிடையே, இங்குள்ள ஸ்ரீ முருகன் நிலையத்தில் இன்று நடைபெற்ற மறைந்த தான் ஸ்ரீ தம்பிராஜாவின் இறுதிச் சடங்கில், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் என திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version