கோலாலம்பூர், ஜூன் 24-பிடிகேஎல்40 எனப்படும் கோலாலம்பூர் உள்ளூர் திட்டம் 2040 அடிப்படையில் தலைநகரின் எதிர்கால மேம்பாட்டிற்கு பொது போக்குவரத்து முக்கிய பாலமாக அமைந்திருக்கும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இத்திட்டம் வெற்றியடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து துறை மூலம் கூடுதல் எம்ஆர்டி சேவைகளை ஏற்படுத்துவது போன்ற புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் சொன்னார்.
தலைநகரில் தற்போது பெரும்பாலோர் பொது போக்குவரத்தையே அதிகம் பயன்படுத்தி வருவதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
இவர்கள் பயனடையும் வகையில் பிடிகேஎல் 40 திட்டத்தில் பொது போக்குவரத்து சேவைகள் மேம்படுத்தப்படும் என்று இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழாவில் பிரதமர் கூறினார்.
2040ஆம் ஆண்டிற்குள் 70% மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை பிடிகேஎல்40 இலக்காகக் கொண்டிருப்பதாக கோலாலம்பூர் மேயர் டத்தோஸ்ரீ மைமுனா முஹமது ஷரீஃப்பை அவர் மேற்கோள் காட்டினார்.

