Site icon அநேகன்

மருத்துவ கல்வி கட்டணம் அதிகரிப்பு! பி40 மாணவர்கள் பரிதவிப்பு 

கோலாலம்பூர், ஜூன் 25-

மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ கல்விக்கான கட்டணம் வானளாவிய நிலையில் அதிகரித்திருப்பதால் பி40 குடும்ப மாணவர்கள் மருத்துவராகும் கனவு நனவாகாது என்று மசீச தலைவர் டாக்டர் வீ கா சியோங் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

2023இல் அப்பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்விக்கான கட்டணம் 299,107 ரிங்கிட்டாகவும் 2024இல் 299,200 ஆகவும் 2025இல் 500,000 ரிங்கிட்டாகவும் அதிகரித்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மலாயா பல்கலைக்கழகத்தில் அடிமட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு மருத்துவக் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அந்தப் பல்கலைக்கழகம் செல்வந்தர்களின் பிள்ளைகள் மட்டுமே கல்வி கற்க உருவாக்கப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது நாட்டு மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் வீ கா சியோ கடுமையாகச் சாடியுள்ளார்.

(பொன் முனியாண்டி)

 

Exit mobile version