Site icon அநேகன்

ஜசெகவில் மீண்டும் தோனி புவா! 

கோலாலம்பூர், ஜூன் 25-

ஜசெக கட்சியில் தோனி புவா மீண்டும் இணைந்ததை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் உறுதிப்படுத்தினார்.

முன்னாள் டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினரான தோனி புவாவை ஜசெக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக நியமிக்க மத்திய செயற்குழு இணக்கம் தெரிவித்திருப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டு ஜசெக மத்திய செயற்குழுவில் இடம் பெற முடியாத காரணத்தால் தோனி புவாவால் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது.

அவர் தற்போது கட்சியின் மத்திய தலைமைக்கு மீண்டும் திரும்பியுள்ளதாக அறியப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

Exit mobile version