கோலாலம்பூர், ஜூன் 25-மெனாரா இல்ஹாம் சொத்துரிமையைப் பறிமுதல் செய்ய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என்று கூறப்படுகிறது.
இதனை எம்ஏசிசியின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
இவ்வழக்கு மீதான மனு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
தவிர, முன்னாள் நிதியமைச்சர் துன் டைய்ம் குடும்பம் தொடர்புடைய மற்ற சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கு ஏதுவாக விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யவும் எம்ஏசிசி தயாராக இருப்பதாக அவர் மேலும் சொன்னார் .

