Site icon அநேகன்

சபா தேர்தல் :சொந்த சின்னத்தில் தே.முன்னணி களம் இறங்கும்!

வரும் சபா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி தனது சொந்த சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹமத் ஜாஹித் ஹமிடி கூறினார்.

இத்தேர்தலில் தேசிய முன்னணி தனது சொந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்படும் என்றார் துணைப் பிரதமருமான ஜாஹித்.

“எல்லோருக்கும் எல்லா விஷயங்களிலும் ஒத்துழைக்க வேண்டும் என்பதல்ல.  அதே சமயம், யாரையும் முற்றிலுமாக தவிர்க்கவும் கூடாது” என்றார்.

தேசிய முன்னணி சொந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் மற்ற அரசியல் கூட்டணிகளுடன் இணைந்து செயல்படுவதை அம்னோ உறுதி செய்யும் என்று  அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version