கோலாலம்பூர், ஜூன் 26-
இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களுக்கு எஸ்எஸ்டி வரி விதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.
விற்பனை, சேவை வரியின் வரம்பு விரிவாக்கத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள்கள், ஆரஞ்சுகளை விலக்கு அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அன்வார் குறிப்பிட்டார்.
பொதுமக்கள், குறிப்பாக குறைந்த வருமானம் பெரும் பி40 பிரிவினர் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கோத்தா மடானி அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றியபோது பிரதமர் சுட்டிக் காட்டினார்.
இறக்குமதி பழங்களுக்கு சிறிய அளவிலான வரி தொடர்ந்து விதிக்கப்படும் என்றாலும், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களுக்கு விலக்களிக்க அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜூலை 1 முதல் இறக்குமதி பழங்களுக்கு 5% விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று நிதியமைச்சு முன்னதாகக் கூறியிருந்தது.

