கோலாலம்பூர், ஜூன் 30-
தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் புதன்கிழமையன்று 66 வயதை அடையும் வேளையில் அவர் பதவியை விட்டு விலகும் நேரம் வந்து விட்டதாக வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் எஸ்ரி அப்துல் வகாப் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அவரின் பதவி காலத்தை இன்னும் 6 மாத காலத்திற்கு நீட்டிக்கும் விவகாரத்தில் மடானி அரசாங்கம் மெளனம் காப்பதோடு, அவருக்குப் பதிலாக அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதை இன்னமும் அறிவிக்கவில்லை என்பது புரியாத புதிராக உள்ளதாக எஸ்ரி கூறினார்.
தலைமை நீதிபதி நாட்டின் நீதித்துறையில் அரசியல் தலையீடு இன்றி நடுநிலையாக, நியாயத்தோடு நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதோடு, அரசும் இந்த விவகாரத்தில் தங்களுக்குச் சாதகமான நபரை தலைமை நீதிபதியாக நியமிக்கக் கூடாதென்றும் எஸ்ரி கேட்டுக் கொண்டார்.
-பொன் முனியாண்டி

