Site icon அநேகன்

ஊடக மன்றம்: முதலாவது செயற்குழு 6 மாதங்களில் தேர்வு ! ஃபஹ்மி ஃ பாட்சில்

புக்கிட் மெர்தாஜாம், ஜூன் 30-

மலேசிய ஊடக மன்றத்தின் முதலாவது செயற்குழுவினர் இன்னும் ஆறு மாதங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல் வழி தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தொடர்பு துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃ பாட்சில் தெரிவித்தார்.

“இதன் செயற்குழு அல்லது மன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கு தேர்தல் நடத்தப்படுவது அவசியம்” என்றார் ஃபஹ்மி.

“இவ்விவகாரம் இம்மன்றத்தின் தோற்றுநர் வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அவர்கள்தான் இதனை வழிநடத்துவர் ” என்று இங்குள்ள பெனாந்தி, யாயாசான் அமானில் நடைபெற்ற மடானி சமூக நிகழ்ச்சியுனூடே செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசினார்.

 

Exit mobile version