Site icon அநேகன்

சபா தேர்தலையொட்டி, அம்னோ பொதுப்பேரவை ஒத்திவைப்பு

கோலாலம்பூர், ஜூலை 1-

சபா சட்டமன்ற தேர்தலையொட்டி, 2025 அம்னோ பொதுப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு நடைபெற்ற அக்கட்சியின் உச்சமன்றக்கூட்டத்தில், அம்னோவின் பொதுப்பேரவையை, நவம்பர் 26 முதல் 29ஆம் தேதி வரையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

சபா தேர்தலுக்கு, அம்னோ தயாராக வேண்டும் என்பதற்காக அம்முடிவு எடுக்கப்பட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோ வீரா டாக்டர் அஷ்ரஃப் வஜ்டி டுசூக்கி தெரிவித்தார்.

இதற்குமுன்பு, அம்னோ பொதுப்பேரவை ஆகஸ்ட் 20 முதல் 23ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

அம்னோ பொதுப்பேரவை ஒத்திவைக்கப்பட்டதன் வழி, சபா தேர்தல் நெருங்கிவிட்டதை காட்டுகின்றது.

Exit mobile version