Site icon அநேகன்

அமைதிப் பேரணி: சில நிபந்தனைகளை அகற்றியது கூட்டரசு நீதிமன்றம்! 

கோலாலம்பூர், ஜூலை 1-

அமைதிப் பேரணியை நடத்துவதற்கு தற்போதுள்ள முக்கிய நிபந்தனையை கூட்டரசு நீதிமன்றம் அகற்றி சரித்திர சாதனையைப் புரிந்துள்ளது.

அந்தச் சட்டத்தின் பிரிவு 9(5)இன் படி, கூட்டம் நடைபெறுதவற்கு 5 நாள்களுக்கு முன்னர், போலீஸாரிடன் அது பற்றி தெரிவித்து அனுமதியைப் பெற வேண்டுமென்ற நிபந்தனை அரசமைப்பு விதிகளுக்குப் புறம்பாக இருப்பதாகக் கூறி அதனை ரத்து செய்ய வேண்டுமென்று கூட்டரசு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கண்ட விதியானது பேச்சு சுதந்திரம், அமைதியாகக் கூடுதல் மற்றும் அமைப்புகளை நிர்வகிக்கும் உரிமையைப் பறிப்பதாகக் கூறிய தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட், மேற்கண்ட விதியானது அமைதிப் பேரணியில் தலையிட்டு, பேரணியை தடுக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version