Site icon அநேகன்

எஸ்எஸ்டி வரி விதிப்பு தொடங்கியது

கோலாலம்பூர், ஜூலை 1-

பொதுமக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் விரிவாக்கம் செய்யப்பட்ட விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி) இன்று முதல் அமலுக்கு வருவதாக இரண்டாவது நிதியமைச்சர் அமிர் ஹம்ஸா அஸிஸான் அறிவித்தார்.

இந்த வரியின் மூலம் அத்தியாவசியமற்ற பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படுவதாகவும் பி40 மற்றும் எம்40 பிரிவு மக்களுக்கு பல்வேறு உதவிநிதிகளை வழங்க இந்த வரி விதிப்பு வகை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

எம்40 மக்கள் வீடு வாங்க 5 லட்சம் ரிங்கிட் வரை குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறவும் தொழிற்சங்க உறுப்பினர்கள் வாங்கும் பொருள்களுக்கு 30 விழுக்காடு கழிவு தரும் மடானி தொழிலாளர் அட்டை போன்றவையும் வழங்கப்படும்.

இந்த வரி விதிப்பின் மூலம் இவ்வாண்டு 500 கோடி ரிங்கிட்டும் 2026இல் 1,000 கோடி ரிங்கிட்டையும் கூடுதல் வருமானமாகப் பெற அரசு திட்டமிட்டுள்ளது

இந்த வரியின் முலம் அத்தியாவசிய பொருள்களின் விலை உயராது என்றும் கட்டட வாடகை, குத்தகை, கட்டட நிர்மாணிப்பு, நிதிச் சேவைகள், தனியார் சுகாதாரச் சேவைகள், மலேசியர் அல்லாதோரின் கல்வி போன்றவற்றிற்கு விரிவாக்கம் காணப்பட்ட இந்த எஸ்எஸ்டி வரி விதிக்கப்படும்.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version