Site icon அநேகன்

இத்தாலி, பிரான்ஸ் & பிரேசிலுக்கு  பிரதமர் அதிகாரப்பூர்வ பயணம்! 

சிப்பாங், ஜூலை 1-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகளுக்கு இன்று தமது  அதிகாரப்பூர்வ பயணத்தைத் தொடங்கினார்.

பிரதமர்  மலேசிய பேராளர்கள் குழுவினரோடு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சிப்பாங்,  அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இத்தாலி புறப்பட்டுச் சென்றார்.

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பை ஏற்று அன்வார் முதன் முறையாக அங்கு வருகை மேற்கொண்டார்.

மூன்று நாடுகளுக்கான பிரதமரின் இந்த அதிகாரப்பூர்வ  பயணம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதோடு உலக அளவில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோம், பாரிஸ் மற்றும் ரியோ டி ஜெனிரோ ஆகிய மூன்று முக்கிய பொருளாதார மையங்களுக்கான  அன்வாரின் வருகை சம்பந்தப்பட்ட  நாடுகளுடனான அரச தந்திர உறவுகளையும் வர்த்தக உறவுகளையும் மேம்படுத்தும்  என்றும் நம்பப்படுகிறது.

Exit mobile version