Site icon அநேகன்

பதவி நீட்டிப்பு வழங்கப்படாதது குறித்து வருத்தமில்லை!  தெங்கு மைமூன் 

கோலாலம்பூர், ஜூலை 2-

தமது பதவி காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு அரசு நீட்டிக்கத் தவறியது சம்பந்தமாக தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையென்றும் அது தமக்கு எந்தவிதமான வருத்தத்தையும் அளிக்கவில்லை என்றும் தலைமை நீதிபதி தெங்கு மைமூன் துவான் மாட் குறிப்பிட்டுள்ளார்.

நாளை முதல் ஓய்வு பெறவிருக்கும் அவர், நீதிபதிகளிடம் இன்று பேசியபோது, தாம் 6 ஆண்டு காலம் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து சுதந்திரமான தீர்ப்புகளை வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் நாட்டில் நீதி பரிபாலனம் தொடர்ந்து நல்ல முறையில் நடைபெறும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

தெங்கு மைமூனுக்கு மாற்றாக தலைமை நீதிபதி யார் என்பதை அரசு இன்னமும் அறிவிக்கவில்லை என்பது தற்போது பேசு பொருளாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version