Site icon அநேகன்

16ஆவது பொதுத்தேர்தல்: தேசிய முன்னணியில் புரிந்துணர்வு இல்லாவிட்டால், அம்னோ தனித்து களமிறங்கும்! -அக்மால் சாலே

கோலசிலாங்கூர், ஜூலை 7-

நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலில், தேசிய முன்னணியிலுள்ள எந்தவொரு கட்சியையும் சார்ந்திருக்காமல் தனித்து போட்டியிடுவதற்கு அம்னோ தயாராக இருக்க வேண்டும் என அதன் இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அக்மால் சாலே வலியுறுத்தினார்.

எந்தவொரு கூட்டணியும் புரிந்துணர்வு அடிப்படையில் மட்டுமே உருவாக முடியும், இல்லையெனில், அம்னோ தனித்து போட்டியிடத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்றிரவு அம்னோ கோலசிலாங்கூர் தொகுதி இளைஞர் பிரிவு பேராளர் மாநாட்டை தொடக்கிவைத்து உரையாற்றிய போது டத்தோ அக்மால் இதனைத் தெரிவித்தார்.

மலாக்கா சட்டமன்றத் தேர்தலில், அம்னோ பெற்றிருந்த வெற்றியை சிலாங்கூர் போன்ற பிற மாநிலங்களுடன் ஒப்பிட முடியாது. மக்கள் சேவை செய்யும் தலைவர்களையே மிக முக்கியம்

தேர்தல் நேரத்தில் மட்டும் தோன்றாமல், மக்களுக்காக உண்மையாக உழைத்தால், அம்னோ மீண்டும் மக்கள் மனதில் உயர்ந்த இடத்தைப் பெறும் என மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ அக்மல் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version