Site icon அநேகன்

ஜொகூர் பாருவில் 26 மணி நேர நீர் விநியோகத் தடை

ஜொகூர் பாரு, ஜூலை 7-

ஜொகூர் பாருவைச் சுற்றியுள்ள 30,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் வரும் புதன்கிழமை காலை 9 மணி முதல் மறுநாள் காலை 11 மணி வரை 26 மணி நேரத்திற்கு நீர் விநியோகத் தடையை எதிர்கொள்ள உள்ளனர்.

பாசிர் குடாங்கில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் நீர் சுத்திகரிப்பு நிலையம் -LRA-வில் முழுமையான பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடை ஏற்படுவதாக ரான்ஹில் SAJ Sdn. Bhd. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனுவார் அப்துல் கானி தெரிவித்தார்.

“இந்த பராமரிப்பு பணிகள், அந்த நிலையத்தில் உள்ள அனைத்து முக்கிய கருவிகளின் பழுதுபார்ப்பு மற்றும் ஆய்வு ஆகியவற்றை உள்ளடக்கியவை. இந்த தற்காலிக மூடல், நீர் சுத்திகரிப்பு அமைப்பு நீண்ட காலத்திற்கு திறமையாகவும் பாதுகாப்பாகவும் இயங்குவதை உறுதி செய்ய மிகவும் முக்கியமானது,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்த தடை காலத்தில் பயனர்கள் தேவையான அளவு நீரை சேமித்து வைத்து, நீரை பயன்படுத்துவதில் பொறுப்புடன் செயல்படுமாறு ரான்ஹில் SAJ கேட்டுக்கொள்கிறது. மேலும், மருத்துவமனைகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் தொடர்ச்சியான நீர் தேவைப்படும் நிறுவனங்கள் போன்ற முக்கிய இடங்களுக்கு அவசர தேவைகளை பூர்த்தி செய்ய நீர் தொட்டி லாரிகள் அனுப்பப்படும்,” என்று அவர் கூறினார்.

இந்த தடை தொடர்பான மேலதிக மற்றும் நிகழ்நிலை தகவல்களைப் பெற பொதுமக்கள் 1800-88-7474 என்ற எண்ணில அழைக்கலாம். மேலும், www.ranhillsaj.com.my என்ற இணையதளத்தை பார்வையிடவோ அல்லது ரான்ஹில் SAJ-இன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தையும் பின்தொடரலாம்.

Exit mobile version