கோலாலம்பூர், ஜூலை 7-
நாட்டின் நீதித் துறையில் மகளிரின் பங்களிப்பு மீது புகழாரம் சூட்டப்படுகிறது.
டான்ஸ்ரீ ஹஸ்னா முகமட் ஹாஷிம் நாட்டின் தலைமை நீதிபதியாகவும் டத்தோ ஸபாரியா முகமட் யூசோப் மேல் முறையீட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டு நாட்டின் நீதித் துறையின் பெருமையை உலகுக்குப் பறை சாற்றி வருகின்றனர்.
ஜூலை 2ஆம் தேதி முன்னாள் தலைமை நீதிபதி தெங்கு மைமூனும் முறையீட்டு தலைவர் டான்ஸ்ரீ அபாங் இஸ்கண்டார் அபாங் ஹாஷிமும் பதவி ஓய்வு பெற்றதை அடுத்து, ஹஸ்னாவும் ஸபாரியாவும் நீதித் துறையின் உயரிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-பொன் முனியாண்டி

