Site icon அநேகன்

3 அயல் நாடுகளுக்கான பயணம் வெற்றி! பிரதமர்

கோலாலம்பூர், ஜூலை 8-

இத்தாலி, பிரான்ஸ், பிரேசில் ஆகிய மூன்று நாடுகளுக்கான தமது பயணம் நல்ல அனுகூலங்களைத்  தந்திருப்பதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இதன் வழி மேற்குறிப்பிட்ட  நாடுகளுடனான மலேசியாவின்  அரச  தந்திர உறவுகள் மேம்பாடு    கண்டிருப்பதாக பிரதமர் சொன்னார்.

தவிர,இப்பயணம் பல முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இத்தாலியிலிருந்து தொடங்கிய அதிகாரப்பூர்வ பயணம் ஆசியான் தலைவராக மலேசியாவின் முக்கியத்துவத்தை உலகளவில் தெளிவாகக் காண்பதற்கும்  துணை புரிந்ததாக அவர் விவரித்தார்.

மலேசிய நிறுவனங்கள்  உலகச் சந்தைகளில் ஊடுருவதற்கான வாய்ப்புகளையும் இந்தப் பயணங்கள்  ஏற்படுத்தி இருப்பதாக   அன்வார் குறிப்பிட்டார்.

இத்தாலிக்கு மூன்று நாள் அலுவல் பயணத்தின் விளைவாக, மொத்தம் 8 பில்லியன் வெள்ளிக்கும் அதிகமான சாத்தியமான முதலீடுகளை மலேசியா ஈர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து, பிரான்சில் சாத்தியமான முதலீடு சுமார் 4 பில்லியன் வெள்ளி என கணிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version