Site icon அநேகன்

ஆலயத்தில் பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு:குருக்களுக்கு வலை வீச்சு! 

சிப்பாங், ஜூலை 9-

சிப்பாங், பண்டார் பாரு சாலாக் திங்கி ஆலயத்தில் பெண் ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குருக்களைத் தேடும் நடவடிக்கையைப் போலீஸார் முடுக்கி விட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணின் முகத்தில் நீரைப் பீய்ச்சி அடித்து, அவரிடம் அடாத செயலை மேற்கொண்ட அந்த குருக்கள், வெளிநாடு சென்றுள்ள ஆலய குருக்களுக்கு மாற்றாக நியமிக்கப்பட்ட தற்காலிக குருக்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, தண்டம் மற்றும் பிரம்படியும் விதிக்க சட்டம் வகை செய்கிறது.

-பொன் முனியாண்டி

 

 

Exit mobile version