Site icon அநேகன்

கிளந்தானில் 100க்கும் அதிகமான சட்டவிரோத ஊடுருவல் வழித்தடங்கள்!  

பாசீர் மாஸ், ஜூலை 17-

கிளந்தான்-தாய்லாந்து எல்லை நெடுகிலும் சட்டவிரோத அந்நியர்கள் நாட்டில் ஊடுருவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

எனினும், அங்கு நூற்றுக்கும் அதிகமாக வழித்தடங்கள் இன்னமும் சட்டவிரோதமாகச் செயப்படுவதாகப் பொது பாதுகாப்பு பிரிகேடின் ஆணையர் டத்தோ நிக் ரோஸ் அஸான் நிக் அப்துல் ஹமிட் கவலை தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஊடுருவும் நடவடிக்கைகள் தும்பாட், பாசிர் மாஸ் மற்றும் தானா மேரா போன்ற பகுதிகளில் செயல்படுகின்றன.

அந்தச் சட்டவிரோத வழித்தடங்கள் எல்லைக்கருகில் கிராம குடியிருப்புகளில் இருப்பதால், தாய்லாந்திலிருந்து ஊடுருவுவோரைத் தடுப்பதில் போலீஸார் கடும் சிரமத்தை எதிர்நோக்குவதாக நிக் ரோஸ் சுட்டிக்காட்டுகிறார்.

ஜனவரி 1லிருந்து ஜூலை 14ஆம் தேதி வரை சுங்கை கோலோக் வழியாக ஊடுருவிய தாய்லாந்து, பாகிஸ்தான், மியன்மார் நாட்டைச் சேர்ந்த 71 அந்நியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version