கோலாலம்பூர், ஜூலை 18-
மலேசிய அரசியலமைப்பின் 122B(1) பிரிவின் கீழ், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆலோசனையைத் தொடர்ந்து, ஆட்சியாளர் மன்றக் கூட்டத்தில் கலந்தாலோசித்தப் பின், பேரரசர் சுல்தான் இப்ராஹிம் நாட்டின் தலைமை நீதிபதி உட்பட முக்கிய நியமனங்களுக்கு அனுமதியளித்துள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:-
1) டத்தோ வான் அகமட் ஃபரிட் பின் வான் சாலே – கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
2) டத்தோ அபு பாக்கர் பின் ஜைஸ் – மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர்
3) டத்தோ ஹாஜா அஸிஸா பிந்தி ஹாஜி நவாவி – சபா மற்றும் சரவாக் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (ஓய்வு பெறவுள்ள தலைமை நீதிபதிக்கு பதிலாக)
அம்மூவரின் நியமன கடிதம் வழங்கும் விழாவும், பதவியேற்பு சடங்கும் பேரரசர் முன்னிலையில், இம்மாதம் 28ஆம் தேதி இஸ்தானா நெகாராவில் நடைபெறவுள்ளது.
நன்றி: மலேசிய நீதிமன்றங்களின் தலைமை பதிவாளர் அலுவலகம்

