அலோர் ஸ்டார், ஜூலை 18-
பெரிக்காத்தான் நேஷ்னல் ஆட்சியைப் பிடித்தாலும் தாம் மீண்டும் பிரதமராகும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
100 வயதான அவர், தமது 80 ஆண்டு அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் ஆலோசனைகளை வழங்க விரும்புவதாகவும் கூறினார்.
“எனக்கு வயதாகிவிட்டது, இளைஞர்களின் இடத்தைப் பறிக்க விரும்பவில்லை. 24 ஆண்டுக்காலம் பிரதமர் பதவியில் இருந்த அனுபவத்தை ஆலோசனையாக வழங்குவேன்,” என்று கெடா, அலோர் ஸ்டாரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய போது துன் மகாதீர் குறிப்பிட்டார்.
பெரிக்காத்தான் நேஷ்னல் ஆட்சியில் வறுமை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“மலேசியா செல்வம் நிறைந்த நாடு. சொத்துக்கள் சரியாக நிர்வகிக்கப்பட்டால் மக்கள் வசதியாக வாழ முடியும்,” என்றார்.

