Site icon அநேகன்

ஜாவி அமைப்புடனான வழக்கு: சித்தி காசிம் வெற்றி! 

ஜாவி

 

கோலாலம்பூர், ஜூலை 18-

2016ஆம் ஆண்டு திருநங்கைகள் சம்பந்தமான அழகுப் போட்டியில் பார்வையாளராகக் கலந்து கொண்டதற்காக கூட்டரசு பிரதேச இஸ்லாமிய விவகார இலாகாவினால் தான் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சித்தி காசிம் வெற்றி பெற்றுள்ளார்.

மேற்கண்ட அமைப்பிற்கு நிதி சேர்க்கும் நோக்கத்தில் நடத்தப்பட்ட அந்த அழகுப் போட்டியில் கலந்து கொண்ட சித்தி காசிமை கைது செய்தது சட்டவிரோதம் என கூறி, அவருக்கு இழப்பீடாக 160,000 ரிங்கிட்டை மேற்கண்ட இஸ்லாமிய விவகார அமைப்பு செலுத்த வேண்டுமென கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சித்தி தமது வாதத்தில் தாம் நான்கு மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டபோது, தமது தனிநபர் சுதந்திரம் பறிக்கப்பட்டதாகவும், தாம் சொல்லொணா அதிர்ச்சியும் அவமானத்தையும் அனுபவித்ததாகவும் அதன் விளைவாக தமக்கு ஆழ்ந்த மன அழுத்தம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version