கோலாலம்பூர், ஜூலை 19-
நாட்டின் அரசியல் நிலைத் தன்மையை உறுதி செய்ய பிரதமர் அன்வார் இப்ராஹிம் இத்தவணை முடியும் வரை மட்டுமே பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டுமென்று பிகேஆர் பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி குறிப்பிட்டார்.
தற்போதைய பொருளாதார சிக்கல், அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு போன்றவற்றைச் சமாளித்து நாட்டில் நிலையான பொருளாதார சூழ்நிலையை உருவாக்க அன்வார் இத்தவணை முடியும் வரை மட்டுமே பிரதமராக இருக்க தாம் விரும்புவதாகவும் ரபிஸி தெரிவித்தார்.
தற்போதைய நிச்சயமற்ற சூழ்நிலையில் ஆட்சி மாற்றத்தை நாடும் மக்களும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்பதால் அன்வார் முன்கூட்டியே பதவி விலக வேண்டுமென்று தாம் விரும்பவில்லை என்றார் ரபிஸி.
-பொன் முனியாண்டி

