Site icon அநேகன்

போலியான பெயரில் ஷாங்காயில் பதுங்கி வாழ்கிறார் ஜோ லோ! 

கோலாலம்பூர், ஜூலை 19-

1எம்டிபி நிதி நிறுவனத்தின் 1,900 கோடி ரிங்கிட்டை கொள்ளையடித்த குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருக்கும் பினாங்கு தொழிலதிபரான ஜோ லோ, ஆஸ்திரேலிய கடப்பிதழைப் பயன்படுத்தி போலியான கிரேக்க பெயரைக் கொண்டு சீனாவில் பதுங்கி வாழ்வதாக இரு பத்திரிகையாளர்கள் காணொளி நிகழ்ச்சியின் வழி குறிப்பிட்டுள்ளனர்.

மலேசிய அரசாங்கத்தினால் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஜோ லோ, பல ஆண்டுகளாகப் பிடிபடாமல் தற்போது சீனா, ஷாங்காயில் உள்ள கிரீன் கில் எனும் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் விலையுயர்ந்த மாளிகை ஒன்றில் சொகுசு வாழ்க்கையை வாழ்வதாகவும் மேற்கண்ட பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீன அரசாங்கத்தின் வியூக ஆலோசகராகச் செயல்பட்டு வரும் ஜோ லோ, உலகளவில் சீன நிறுவனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் வேலையைச் செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ஜோ லோ எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில் அவரைக் கைது செய்து நாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை என்றும் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேய்ன் குறிப்பிட்டுள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version