Site icon அநேகன்

பேரணியில் பங்கேற்க  சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு தடை! 

கோலாலம்பூர், ஜூலை 26-

இன்று சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ‘அன்வார் பதவி விலக வேண்டுமென்ற பேரணி’ யில் சிலாங்கூர் அரசு ஊழியர்கள் பங்கெடுக்கக் கூடாதென்று மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி அறிவுறுத்தியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கான ஒழுங்கு நடைமுறை விதிகளில் அம்மாதிரியான அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் சம்பந்தப்பட அனுமதிக்கப்படாது. இதனை அனைவரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பேரணியில் கலந்து கொள்வோரைத் தடுக்க தாம் முனையவில்லை என்றும் ஆனால், பின்னர் எழும் பிரச்சினைகளில் சிக்க வேண்டாமென்றும் அவர் வலியுறுத்தினார்.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version