Site icon அநேகன்

வழிப்பறிக் கொள்ளை:ஆடவன் அடித்துக் கொலை! 

கோலாலம்பூர், ஜூலை 26-

செராஸ் பத்து 9இல் மழலையர் பள்ளி ஆசிரியை ஒருவரிடமிருந்து கைப்பையைக் கொள்ளையிட்ட அந்நிய நாட்டு சந்தேக நபரைப் பொதுமக்கள் சிலர் அடித்தே கொன்றதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 11மணிக்கு நடந்ததாகவும், செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாரும் மருத்துவ உதவியாளர்களும், அந்த ஆடவன் இறந்து விட்டதாக அறிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version