கோலாலம்பூர், ஜூலை 26-
தலைநகர் புக்கிட் லேடாங்கில் உள்ள துன் மகாதீர் பேத்தியின் வீட்டில் நுழைந்த திருடர்கள் 1.8 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் யூசுப் ஜான் முகமட் தெரிவித்தார்.
பிற்பகல் 3 மணியளவில் வீட்டின் கேட்டின் பூட்டை வெட்டி, திருடர்கள் வீட்டினுள் நுழைந்ததாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மறைக்காணி கருவியில் பதிவான வீடியோ காட்சிகளின் மூலம் திருடர்களின் அடையாளத்தைக் காணும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக யூசுப் தெரிவித்தார்.
-பொன் முனியாண்டி

