Site icon அநேகன்

ஆடவர் கடத்தல்: இரு சகோதரரர்களுக்கு வெ. 2,000  பிணை! 

பூச்சோங், ஜூலை 29-

இவ்வாண்டு ஜூலை 22ஆம் தேதி மாலை 6.38 மணியளவில் புக்கிட் பூச்சோங் எனுமிடத்தில் நபர் ஒருவரிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்தோடு கடத்தி, காயப்படுத்தி, அடைத்து வைத்திருந்த இரு சகோதரர்கள் தலா 5,000 ரிங்கிட் மற்றும் 2,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட நபரைக் கடத்திக் காயப்படுத்தியதாக லோரி ஓட்டுநரான வி. கார்த்திக் மற்றும் பொருள் விநியோகிப்பாளரான வி. தேஸ்விந்திரன் ஆகியோர் மீது ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நிதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டன.

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவ்விருவருக்கும் முதல் குற்றத்திற்காக தலா ஓராண்டு சிறை தண்டனையும் அடுத்த குற்றத்திற்காக தலா 2,000 ரிங்கிட் வரை தண்டமும் விதிக்க சட்டம் வகை செய்கிறது.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version