Site icon அநேகன்

டாக்சி சங்கத்தினரின் பேரணி: அன்வாருக்கு அழைப்பு

கோலாலம்பூர், ஜூலை 29-

பிரதமர் பதவி விலக வேண்டுமென்று கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட பேரணிக்கு எதிராக, செப்டம்பர் 27ஆம் தேதி வாடகைக்கார் ஓட்டுநர்கள் நடத்தும் பேரணியில் கலந்து கொள்ள அன்வாருக்கு அழைப்பு விடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்வார் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டுமென்பதை வலுயுறுத்தி, அந்தப் பேரணி டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறும் என்று மலேசிய ஒருங்கிணைந்த டாக்சி ஓட்டுநர் சம்மேளனத்தின் தலைவர் கமாருடின் ஹுசேய்ன் தெரிவித்தார்.

நாட்டைத் தொடர்ந்து வழிநடத்த எல்லா தகுதிகளும் அன்வாருக்கு இருப்பதால், தமது சங்கம் அவருக்கு ஆதரவாக இருக்கும் என்றும் தங்களது பேரணியில் பிகேஆர் மற்றும் அம்னோ தலைவர்களோடு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், மாணவர் அமைப்புகள் போன்றவையும் கலந்து கொள்ளும் என அவர் தெரிவித்தார்.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version