Site icon அநேகன்

காதலி கொலை: ஆடவருக்கு 35 ஆண்டு சிறை! 

கோலாலம்பூர், ஜூலை 30-

மூன்றாண்டுகளுக்கு முன்னர் காதலியைக் கொன்ற இந்திய பிரஜைக்கு இங்குள்ள உயர்நீதிமன்றம் 35 ஆண்டு சிறை தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்தது.

பல்வந்தர் சிங் என்ற 36 வயது ஆடவரே குற்றச்சாட்டை எதிர்நோக்கியவர்.

கடந்த 2022 அக்டோபர் 6ஆம் தேதி, கோலாலம்புர் புக்கிட் பிந்தாங், ஜாலான் ஆலோரில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவு 8.30 தொடங்கி 9.20 மணி வரையில், தமது காதலியின் கழுத்தை நெரித்துக் கொன்றதாக இவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவர் குற்றவாளி என தீர்ப்பளித்து 35 ஆண்டு சிறை தண்டனையையும் 15 பிரம்படிகளையும் விதித்தது.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version