Site icon அநேகன்

புதிய மை சாரா உதவி நிதி: 22 மில்லியன் மலேசியர்கள் பயனடைவர் 

கோலாலம்பூர், ஆக.5-

வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க உதவும் வகையில் அரசின் புதிய மை சாரா எனும் ஒரு முறை 100 ரிங்கிட் உதவிநிதி இவ்வாண்டு ஆகஸ்டு 31முதல் விநியோகிக்கப்படும் என்று இரண்டாவது நிதியமைச்சர் அமிர் ஹம்ஸா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

2007ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்து தற்போது 18 வயதுக்கும் மேலாகியிருக்கும் அனைத்து மலேசியர்களின் மைகார்ட் அட்டையில் அந்த உதவிநிதி சேர்ப்பிக்கப்படும் என்றும் அதற்கென சிறப்புப் பதிவு எதுவும் தேவைப்படாது என்றும் அவர் கூறினார்.

இத்திட்டத்தின் வாயிலாக 22 மில்லியன் மலேசியர்கள் பயனடைவார்கள் என்றும் அரசு 200 கோடி ரிங்கிட்டை இத்திட்டத்திற்கென ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்த அவர், நாட்டிலுள்ள 4,500 பதிவுபெற்ற கடை முகப்புகளில் 90,000 வகையிலான அத்தியாவசிய பொருள்களான அரிசி, முட்டை, மருந்துப் பொருள்கள், சுகாதாரப் பொருள்கள் மற்றும் பள்ளிக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ள முடியும் என்றும் அமிர் ஹம்ஸா குறிப்பிட்டார்.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version