பெட்டாலிங் ஜெயா, ஆக. 5-
புத்ரா பல்கலைக்கழகத்தின் அருகே கடந்த சனிக்கிழமை பிற்பகல் 12.18 மணியளவில் பாலர் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மரத்தில் மோதி, விபத்துக்குள்ளானதில் ஓர் ஆசிரியையும் 3 மாணவர்களும் காயமடைந்தனர்.
தூக்கக் கலக்கத்தில் அந்த விபத்து நேர்ந்திருப்பதாகவும் பேருந்து ஓட்டுநர் ஹமிர் மஸ்ருடினின் (44) கவனமின்மையால் அந்த விபத்து நேர்ந்துள்ளதைக் கவனத்தில் கொண்டு, பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நுர் நஸ்தாஸ்யா மோஹ்த்தாருடின் அவருக்கு 7 சிறை தண்டனையோடு 8,000 ரிங்கிட் அபராதத்தையும் விதித்தார்.
பேருந்து ஓட்டுநருக்கு இதற்கு முன்னர் 13 போக்குவரத்துச் சம்மன்கள் இருப்பதாகவும் நோய்வாய்ப்பட்டிருக்கும் தனது தாயாரைப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதைக் கருத்தில் கொண்டு, மாஜிஸ்திரேட் அவருக்கு மேற்கண்ட குறைவான தண்டனையை விதித்துள்ளார்.
-பொன் முனியாண்டி

