Site icon அநேகன்

இணைய தளத்தின் மீது விசாரணை!

அண்மையில், சபா மாநிலத்தில் 70,000 சதுர மீட்டர் காட்டு நிலத்தின் கனிம வளத்தை வெட்டி எடுக்க அம்மாநில அரசு, பிரதமர் அன்வார் இப்ராஹிமின் முன்னாள் அரசியல் செயலாளர் ஃபார்ஹாஸ் வாஃபா சல்வடோர் ரிஸால் முபாராக்கிற்கு கையூட்டு வழங்கியதாக மலேசியா நவ் எனும் இணையதள ஏடு குற்றம் சாட்டியிருந்தது.

அந்த இணையதளம் தனது செய்தியில் போலீஸாரின் ஆவணங்களை வெளியிட்டிருப்பதால் அது ரகசிய காப்பு சட்டத்தை மீறிய செயலென்று வகைப்படுத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் அந்த இணையதள பத்திரிகை மீது புலன் விசாரணை முடுக்கிவிடப்பட்டதோடு அதன் ஆசிரியர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட குத்தகைக்கு ஃபார்ஹாஸின் பூமி சூரியா என்ற நிறுவனம் உரிமம் பெற்றிருந்தது.

எனினும், அந்நிறுவனத்திற்குத் தேவைப்படும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறிய காரணத்தினால் வழங்கப்பட்ட உரிமை ரத்து செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.

சட்டவிரோத கனிமவள உரிம விவகாரத்தை வெளியில் கசியவிட்ட மலேசியா நவ் இணைய பத்திரிகையைப் பழி வாங்கும் நோக்கில் எம்ஏசிசியின் விசாரணை நடத்தப்படுகிறதா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளதாக மலேசியா கினி செய்தி வெளியிட்டுள்ளது.

-பொன் முனியாண்டி

 

 

Exit mobile version