Site icon அநேகன்

4,352 மருத்துவர்களுக்கு நிரந்த நியமன கடிதங்கள்! 

கோலாலம்பூர், ஆக.8-

நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் மொத்தம் 4,352 மருத்துவர்களுக்கு அரசின் நிரந்தர பதவி நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகப் பொதுச் சேவை ஆணையம் அறிவித்துள்ளது.

வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் மேற்கண்ட அனைவரும் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் பதவியேற்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட புதிய நிரந்தர மருத்துவர்கள் தொடக்கத்தில் யுடி10 எனும் பதவி கிரேடில் நியமிக்கப்படுவர் என்றும் மேற்கண்ட நடவடிக்கையானது நாட்டில் சுகாதாரத் துறை போதுமான மருத்துவர்கள் இன்றி கடும் நெருக்கடியை சந்தித்து வருவதைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version