Site icon அநேகன்

தொலைபேசி மோசடி : 71 பேர் கைது! 

கோலாலம்பூர், ஆக. 8-

நாட்டில் தற்போது தொலைபேசி வழியாக பொது மக்களின் வங்கிக் கணக்கிலிருக்கும் பணத்தைக் கொள்ளையிடும் ‘போன் ஸ்கேம்’ எனப்படும் மோசடிகள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது.

இந்த மோசடி கும்பலிடம் தங்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதித்து லாபம் அடைந்த 71 பேர் நாடு முழுமையிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டிருப்பதாக புக்கிட் அமான் புலன் விசாரணை இயக்குநர் ருஸ்டி இசா தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 19 முதல் 50 வயதுக்குட்பட்ட 55 ஆண்கள் 9 பெண்கள் உள்ளதாகவும், இவர்களில் 8 அந்நிய நாட்டவர்களும் அடங்குவர் என்றும் அவர் கூறினார்.

அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் பல்வேறு சட்டங்கள் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் ருஸ்டி சொன்னார்.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version