Site icon அநேகன்

ரபிஸியின் மகன் தாக்கப்பட்ட சம்பவம்: சிசிடிவியில் புதிய ஆதாரம்

கோலாலம்பூர், ஆக. 16-கடந்த புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பாண்டான் எம்பி ரபிஸி ரம்லியின் 12 வயது மகன் காரிலிருந்து இழுக்கப்பட்டு, சிரிஞ்சு(ஊசி) ஒன்றினால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அது சம்பந்தமாக அறிவிப்பை வெளியிட்டிருக்கும் சிலாங்கூர் போலீஸார், அந்தச் சம்பவம் பேரங்காடி ஒன்றில் நடந்திருப்பதை அடுத்து அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளைத் தாங்கள் அணுக்கமாக ஆராய்ந்து வருவதாகவும் அதன் மூலம் அதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்களை அடையாளம் கண்டு, கைது செய்ய முடியும் என உறுதி கூறியிருக்கின்றனர்.

மகன் மீதான தாக்குதல் தமது அரசியல் நடவடிக்கைகளை முடக்கும் நோக்கம் கொண்டது என்றும், அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து தமது மகன் 6 மாத காலத்திற்கு மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளதாகவும் ரபிஸி தெரிவித்துள்ளார்.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version