Site icon அநேகன்

தேசிய கொடியை உதாசீனப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை! 

கோலாலம்பூர், ஆக.17-

அண்மைய காலமாக தேசிய கொடியை உதாசீனம் செய்யும் நடவடிக்கைகள் நடந்து வருவது பற்றி பல தரப்பினரும் தங்களது கவலையைத் தெரிவித்து வருகின்றனர்.

பினாங்கு கப்பளா பாத்தாஸில் வர்த்தகர் ஒருவர் தேசிய கொடியைத் தலைகீழாகத் தொங்க விட்டதும் போர்ட்டிக்‌சனில் பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவரின் குறிப்பேட்டில் முற்றுப் பெறாத தேசிய கொடியின் படத்தை அச்சிட்டு வழங்கியதும் இங்கு சுட்டிக் காட்டப்படுகின்றன.

அது பற்றிக் குறிப்பிட்ட உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன், தேசிய சின்னத்தையும் கொடியையும் எல்லோரும் மதித்து தகுந்த மரியாதையைச் செலுத்த வேண்டுமென்றும் அதனை துஷ்பிரயோகம் செய்து சிறுமைப்படுத்துவோர் சட்டத்தின் வழி கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என எச்சரித்துள்ளார்.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version