Site icon அநேகன்

வரவுச் செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மற்ற நிதி ஒதுக்கீடுகளை வர்த்தகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: செல்வன்

கோலாலம்பூர்:

மித்ரா நிதியைத் தவிர்த்து வரவுச் செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை வர்த்தகர்கள் பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோலாலம்பூர், புத்ராஜெயா இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கத்தின் செயலாளர் செல்வன் நாகப்பன் கூறினார்.

100 மில்லியன் மித்ரா நிதியை மட்டும் சார்ந்திருக்காமல் அரசாங்கத்தில் உள்ள இதர வாய்ப்புகளை ஆராய்ந்து அதை உறுப்பினர்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நவம்பர் 11-ஆம் தேதி கோலாலம்பூர் ரோயல் கிளப்பில் நடைபெற்ற கோலாலம்பூர், புத்ராஜெயா இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் 15-ஆவது ஆண்டுகூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆண்டுக் கூட்டத்தில் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, உறுப்பினர்கள் பயனடையும் திட்டங்கள், நட்புறவு, வர்த்தக உறவை ஏற்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கைகள் போன்றவை குறித்து விரிவாக பேசப்பட்டன என்றார் அவர்.

மேலும், வெளிநாடுகளிலுள்ள வர்த்தக வாய்ப்புகளை உறுப்பினர்களுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

Exit mobile version