Site icon அநேகன்

முழு முயற்சியுடன் தேர்வில் அமர்வீர்! எஸ்பிஎம் மாணவர்களுக்கு டத்தோ லோக பாலா அறிவுறுத்து

கோலாலம்பூர், நவ. 24- நாளை செவ்வாய்க்கிழமை தொடங்கும் எஸ்பிஎம் தேர்வில் முழு முயற்சியுடன் ஈடுபடும்படி அனைத்து மாணவர்களுக்கும் பிபிபி தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன் அறிவுரை கூறினார்.

இத்தேர்வு அவர்களின் கல்விப் பயணத்தை வடிவமைக்கும் ஒரு முக்கிய அடித்தளமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“மாணவர்கள் முழு முயற்சியுடன் இத்தேர்வில் ஈடுபட வேண்டும்” என்றார்.

பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது குறித்து கவலை தெரிவித்த அவர் எஸ்பிஎம் தேர்வு தடையின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“மழையோ வெயிலோ, அது மாணவர்களின் தேர்வை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது “ என்றார்.

“இத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள் ” என்று அவர் மேலும் கூறினார்.

 

Exit mobile version