Site icon அநேகன்

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் சரஸ்வதி சிவம் மருத்துவத் துறையில் பட்டம் பெற்றார்.

கெளுகோர்:

அண்மையில், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பேராக், ஈப்போவைச் சேர்ந்த சரஸ்வதி த/பெ சிவம் மருத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

பி.சிவம் – எஸ்.விமலா தம்பதியரின் மூன்றாம் பிள்ளையான சரஸ்வதி, குடும்பத்தில் மூன்றாவது பட்டதாரி ஆவார்.

ஆரம்பக் கல்வியை, தேசிய வகை மகிழம்பூ தமிழ்ப்பள்ளியிலும் இடைநிலைக் கல்வியை ஈப்போ கான்வெண்ட் பள்ளியிலும் அவர் பெற்றார்.

சரஸ்வதி கூறியதாவது, மருத்துவர் துறையில் பட்டம் பெறுவது தனது வாழ்வில் மறக்க இயலாத ஒரு முக்கிய தருணம். இப்பயணத்தில் தன்னை ஊக்குவித்துத் துணை நின்ற அனைவரின் பங்களிப்பும் நிறைந்துள்ளது என்றார்.

தன்னம்பிக்கை கொடுத்து, தாம் மென்மேலும் முன்னேற வழி வகுத்த பெற்றோர், மன அழுத்தங்களையும் பயங்களையும் புரிந்து கொண்டு, ஊக்கமளித்த உடன்பிறந்த இரு சகோதரிகள், நண்பர்கள், உறவினர்கள், மிக முக்கியமாக தூண்டுகோலாக இருந்த ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினர்களுக்கு சரஸ்வதி நன்றிக் கூறிகொண்டார்.

Exit mobile version