கோலாலம்பூர்:
அனைத்துலக மோதல்களால் உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள சூழலில், அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி சில தரப்பினர் அரசியல் ஆதாயம் தேடுவதைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்த விலை உயர்வு நாட்டின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட அனைத்துலக நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ளது.
உண்மையான காரணங்களைப் புரிந்துகொள்ளாமல், இந்த விவகாரத்தைப் பொதுமக்களிடையே தவறாகச் சித்தரித்து அரசியலாக்கும் போக்கைக் கைவிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

